சமூகம்

Tuesday, June 7, 2011

கணனி தொழில் நுட்பம்

நீங்கள் பிறந்த வருடத்தில் உலகில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்

து கொள்ள

எல்லோருக்கும் தான் பிறந்த வருடம் தெரியும். ஆனால் அந்நேரத்தில் உலகத்தில் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது.
இக்கவலையைப் போக்கத் தான் இந்தத் ஆங்கிலத் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நாம் பிற‌ந்த‌ வ‌ருட‌ம் இவ்வுல‌கில் என்ன‌னென்ன‌ செய்திக‌ள் பிர‌ப‌ல‌ம், யாருக்கு என்ன‌ விருது கிடைத்த‌து, என்ன‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்த‌ன‌, அந்த‌ வ‌ருட‌த்தின் அரிய‌ க‌ண்டுபிடிப்புக‌ள், பல‌ வித‌மான‌ நிக‌ழ்வுக‌ளை அருமையாக‌ப் ப‌ட்டிய‌லிடுகிறார்க‌ள்.

இந்த இணையதளத்தில் நுழைந்த‌வுட‌ன் ந‌ம்முடைய‌ பிற‌ந்த‌ வ‌ருட‌த்தை டைப் செய்தால் உட‌னே வ‌ருட‌ங்க‌ள் பின்னோக்கி ந‌க‌ரும். நாம் பின்னோக்கி ந‌க‌ர்வ‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிற‌து.

அடுத்து உங்க‌ள் வ‌ருட‌த்திற்கான‌ செய்திக‌ள் அருமையாக‌ ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌ந்துக் கொண்டிருக்கும். இந்த‌த் த‌ள‌ம் ச‌ற்று வித்தியாச‌மாக‌வும், ப‌ய‌னுள்ள‌தாக‌வும் உள்ளது.

Saturday, May 7, 2011

சிறுநீர்ப் பிரச்சினைகளைப் போக்கும் முள்ளங்கி

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.
சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்!
முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பொஸ்பரசும் இதில் அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.
சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.